இறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.siri lankan war crims க்கான பட முடிவு

சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதுடெல்லியில் இதனை தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ரீதியில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. நாங்கள் ஒருபோதும் இனவாத யுத்தத்தை முன்னெடுக்கவில்லை.

இராணுவ நடவடிக்கைகளானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே அமைந்ததே தவிர தமிழ் சமூகத்துக்கு எதிராக நடத்தப்படவில்லை. ராஜீவ் காந்தி மற்றும் மேலும் பலர் உயிரிழப்பதற்கு காரணமாகவிருந்த இந்த பயங்கரவாத அமைப்பானது இலங்கைக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கும் அது அச்சுறுத்தலாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here