பின்தங்கிய பிரதேச மாணவர்களின் ஆரம்பக் கல்வி வளர்ச்சியினை ஊக்குவிக்கும் முகமாகவும், அம்மாணவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கோடும்

உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பினால் பாலர் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சேமிப்பு வைப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட சேமிப்புப் புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் வவுணதீவு, காயான்மடு சிவசக்தி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எம்.நிஸ்கானந்தராஜா மற்றும் மேற்படி அமைப்பின் நிருவாகிகளான என்.ராகவன்,

ஓய்வுபெற்ற அதிபர் க.கிருபைராசா, ஆசிரியர் கா.கமலநாதன், காயான்மடு ஆலயத் தலைவர் விமலநாதன் உட்பட பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கனடாவைச் சேர்ந்த அமரர் சுப்பிரமணியம் சீதா ரோஸ்மேரி அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சீதா ரோஸ்மேரி அவர்களின் புதல்வர் சுப்பிரமணியம் ரவீந்திரன்

அவர்களின் நிதிப்பங்களிப்பில் உமாமகேஸ்வரன் பவுண்டேசனினூடாக இவ் உதவிச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது தலா ஒரு மாணவருக்கு ரூபா 1500.00 சேமிப்பு செய்யப்பட்ட சேமிப்புப் புத்தகமும், அதனுடன் இணைந்த வகையில் கற்றல் உபகரணமுமாகச் சேர்த்து ரூபா 2600.00 பெறுமதியான உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here