
எம் வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து பதிலளிப்பு முயற்சிகளுக்கு உதவும் நிமித்தம் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை உடனடி உதவியாக அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்த நன்கொடையினை பயன்படுத்த முடியும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா முகவரமைப்பின் ஊடாக குறித்த நிதியை இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.