2019 மற்றும் 2020 ஆண்டுக்கான விருதுகளை தமிழக முதல்வர் வழங்கி வைத்தார். அண்மையில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சமீபத்தில் விருதுகளை அறிவித்துள்ளது.
இதில் நாடகம், வில்லிசை என கலைகளுக்கு விருதுகளை வழங்கப்படாது.
இந்த விருது பெறுவோர்களின் பட்டியலில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீதா, மதுமிதா, தேவதர்ஷினி இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இயக்குநர்கள் கவுதம் மேனன், ரவிமரியா, பாடகர்கள் ஜமுனா ரவி, அனந்து, சுஜாதா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் டி இமான், தீனா உள்ளிட்டோரும் இவ்விருதை பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா மற்றும் நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்கான டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி மற்றும் நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா சென்னையில் நடைபெற்றது.