தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,
தருமபுரியில் பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கக் கூட்டம் இன்று மாலை நடந்தது. அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை. மக்கள் நலனுக்காக சிறை சென்றேன்.
தியாகம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு என்னைப்பற்றி பேச தகுதி இல்லை.

தமிழகத்தில் பொய் சொன்னது போதாது என்று லண்டன், அமெரிக்கா சென்று பொய் சொல்கிறார்கள். தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்பது போல என்னை விமர்சித்து வருகிறார்கள்.

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சி, மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை.

உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக முதலமைச்சர் வேலைவாய்ப்பு திட்டங்களை பொய்யாக அறிவித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here