பிரான்ஸ் நாட்டில் இந்த காய்ச்சல் காரணமாக அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கடுமையான சுவாசக் கோளாறை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் காய்ச்சலினால், பிரான்சில் கடந்த நவம்பர் மாதம் முதல் 311 பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் 49 பேரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஜெர்மனியை ஒட்டி அமைந்துள்ள செக் குடியரசு நாட்டிலும் இந்த வைரஸ் நோயினால் 12 பேர் பலியாகினர்.

சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டனர்.

பிரான்ஸ் நகரம்

‘இந்த ஆண்டின் (2020) ஐந்தாவது வாரத்தில், அனைத்து பெருநகரங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

காய்ச்சல் காரணமாக 810 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வார அறிக்கையின் படி, இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் 15 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகள், 15-64 வயதுடையவர்களில் 12 பேர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 பேரும் அடங்குவர்’ என பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here