கேரளாவில் கடந்த 12ஆம் திகதி முதல் கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் கேரளாவில் அதிகமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த கனமழை காரணமாக பம்பை நதி உட்பட அதிகமான நீர் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடும் மழை பெய்வதால் அங்கு சில பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தேடுதல் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கனமழையால் கேரளாவில் 439 தங்குமிட முகாம்கள் அமைக்கப்பட்டு
19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு வழங்கி வருகிறது.