யூனிவர்சிட்டி ஆப் ரீடிங்கில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சக்தி வையாபுரி. பாம்புக்கடி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் உயிர் இழக்கிறார்கள். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறாததால் பல பாம்புக்கடி நிகழ்வுகள் பதிவு செய்யப்படுவதில்லை.
எங்கள் ஆய்வின்படி, ஆண்டுதோறும் தமிழகத்தில் மட்டும் பாம்புக்கடியால் 10 ஆயிரம் பேர் இறப்பதாக தெரியவந்துள்ளது.
எனவே கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாம்புக்கடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.