முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணைக் காவலை அடுத்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்தது. சிபிஐ கைதில் இருந்து அவருக்கு ஜாமின் கிடைத்த நிலையில்,
105 நாட்களாக சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது, 2 லட்சம் ரூபாய் ஜாமின் பத்திரம் இருவர் உத்தரவாதத்துடன் அளிக்க வேண்டும், சாட்சிகளிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடகங்களிடம் பேட்டி எதுவும் அளிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.