கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட 3 சென்ட் நிலத்தை மீட்டுத்தரக்கோரி காவல் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போச்சம்பள்ளி அருகே வேலாவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் கூட்டுக்குடும்பத்தில் 20க்கும் மேற்பட்டோரோடு வசித்து வருகிறார்.
தமக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டிவிட்டதாக மத்தூர் காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து,முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் 15 பேர் மத்தூர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.
அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அங்கிருந்து போலீசார் அழைத்து சென்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.