ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக விசாரணைகள் இல்லாமல் இதில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

அண்மையில் 20 பேர் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றனர்.

சிறப்பு முகாம் என்ற பெயரில் இயங்கும் ஈழத்தமிழர் வதை கூடத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிறையில் உள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் இன்று 16-11-2019 நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 166 நாம் தமிழர் உறவுகள் கைது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here