பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக அயோத்தி நகரம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சென்னை விமான
நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார், மத்திய தொழில் படை போலீசார் ஆகியவர்கள் 7 அடுக்கு வளையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தினுள் வரும் வாகனங்கள், பயணிகள் கொண்டு வரும் உடமைகள் என அனைத்தும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன்பில் இருந்து விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அந்த தடை தற்பொழுதும் நீடித்து வருகின்றன.