மிரட்டலுடன் விஜயகாந்த்

0
1181

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரை சந்தித்து நடிகர் பார்த்திபன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கடந்த 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

தொடர்புடைய படம்

உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

நடிகர் பார்த்திபன் நேற்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார்.
படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ள பார்த்திபன் ‘முன் தினம் தளபதி, நேற்று நம்மவர், இன்று கேப்டன். அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள்’ என நம்பிக்கை அளித்தார் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here