வவுனியா செட்டிகுளம் போலீஸ் பிரிவு மருதமடு பகுதில் 7 வயது சிறுவன் ஒருவன் சடலமாக போலீசார் மீட்டுள்ளனர்.
சிறுவன் நேற்று தனது உறவுக்கார பெண் ஒருவரோடு மாலை வயலுக்கு சென்றுள்ளான்.
நீண்ட நேரத்துக்கு பின்னர் சிறுவன் வீடு சென்றுஇருப்பான் என்று நினைத்து பெண் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
குறித்த சிறுவன் வீடுதிரும்பாமல் இருப்பதை உணர்ந்த பெற்றோர் சிறுவனை தேட தொடங்கினார்கள்.
அப்போது வயலில் சிறுவன் விழுந்து கிடந்ததை கண்ட பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் அனாலும் சிறுவன் வைத்திய சாலையில் அனுமதிக்க முன்னர் இறந்துவிட்டான்.
வீரசிறி தேனுகருக்சான் என்ற சிறுவன் பாம்புக்கடித்து இறந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தொடந்து போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.