இலங்கை மற்றும் சீனாவின் செயல் பாடுகள் எம்மால் இனியும் பொறுமையுடன்
காத்திருந்து வேடிக்கை பார்க்கமுடியாது என இந்தியாவின் முன்னாள் இராணுவ தளபதியும்,
பாதுகாப்பு, பொருளாதார, அரசியல் ஆய்வாளர் மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் : இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா,
ஆகிய நான்கு நாடுகள் செய்துகொண்ட குவாட் நடவடிக்கையின் ஒரு கூட்டம்
நீயோர்க்கில் கடந்த மாதம் இடம் பெற்றுள்ளது.
இதில் இந்தோ – பசுபிக் தொடர்பாகவும் ஆய்வுசெய்யப்பட்டு ஒரு அறிக்கை வெளியிடபட்டுள்ளது.
அதில் இலங்கை பூலோக அடிப்படையில் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கையில் சீனாவின் செயல்பாடுகள் தீவிரமாகவும், கூர்மையாகவும் கவனிக்க படுகின்றது.
குவாட் நாடுகளின் நான்காவது நடவடிக்கையில் விரைவில் முக்கிய விடையங்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.