கோவையில் உள்ள ஈஷா மையத்தில் 26-ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் தங்களது இன்னிசை மூலம் விழாவிற்கு சிறப்பு செய்தனர்.
வித்தியாசமான நடனங்களும் மஹா சிவராத்திரி விழாவை சிறப்பித்தன.
மொழி பேதமின்றி பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்ட நிலையில், பார்வையாளர்கள் அவற்றை அனுபவித்து நடனமாடினர்.
சத்குரு ஜக்கி வாசுதேவும் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமூட்டினார்.
ஆட்டம், பாட்டத்திற்கு நடுவே தியானமும் நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் நடிகைகள் காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி, ஸ்ரேயா உள்ளிட்டோரும் பங்கெடுத்தனர்.