ஹைபோக்ளைசிமிக் எனப்படும் ரத்தத்தில் மிக குறைந்த அளவு சக்கரை இருக்கும் நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க பணம் இல்லாததால் கருணைக் கொலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர் ஆந்திரபிரதேசத்தில் உள்ள சித்தூரை சேர்ந்த பெற்றோர்.
அவர்களின் நிலையை தெரிந்துகொள்ள அங்கு பயணம் செய்தார் பிபிசி தெலுங்கு சேவையை சேர்ந்த பல்லா சதீஷ்.
“அந்த குழந்தைக்கு ஊசி போட்டால் அழுகையை நிறுத்திவிடும். ஆனால் இம்மாதிரியாக ஒருநாளைக்கு 6 லிருந்து 7 ஊசிகள் போட வேண்டும். இரவு 12 மணிக்கு அந்த இன்சுலின் ஊசி போட்டால், அவள் எறும்பு கடித்தது போன்று அசைவால் அவ்வளவுதான்” என்று மிகுந்த துயரத்துடன் சொல்கிறார் அந்த குழந்தையின் தாத்தா பதான் ஆயூப் கான்.
ஆந்திரபிரதேசத்தில் உள்ள சித்தூரில் உள்ள பி.கொத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த பதான் பாவாஜன் மற்றும் பதான் ஷபானாவுக்கு ஹைபோக்ளைசீமியாவுடன் பிறந்தார் ரெட்டி ஷுபானா.
இதற்கு முன், அவர்களின் இரண்டு குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. எனவே அங்கு உள்ளூர் கடவுளான ரெட்டம்மா என்ற கடவுளின் பெயரை அந்த குழந்தையின் பெயருக்கு முன்னால் சேர்த்தனர். அந்த கடவுள் அந்தக் குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார் .