இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தைத் தயாரித்த கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘டாக்டர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் வினய் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.