பாகுபலி 2 படங்களில் நடித்தவர் அனுஷ்கா. இரண்டு படங்களிலுமே முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து பேசப்பட்டார்.

பின்னர் பாகமதி, சைரா நரசிம்மா ரெட்டி போன்ற வரலாற்று படங்களில் நடித்த அனுஷ்கா, அந்த படத்தை தவிர வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார்.

தற்போது மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. தெலுங்கில் இந்தப் படம் நிசப்தம் என்ற பெயரில் தயாராகிறது.

தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட்டை வைத்து ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் அனுஷ்கா சிறப்பு வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான படப்பிடிப்பில் அனுஷ்கா விரைவில் கலந்து கெள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here