அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவியுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் டிரம்ப் விருந்தில் கலந்து கொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருந்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்பை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here