வைரலாகும் அருண் விஜய்யின் போஸ்டர்!

அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் என வியப்பில் ஆழ்த்தும் நட்சத்திர கூட்டம் இணைந்திருக்கும் “அக்னி சிறகுகள்” திரைப்படம், இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பிகுரிய படமாக இருக்கிறது.

மேலும், இப்படத்தில் ரெய்மா சென், பிரகாஷ் ராஜ், ஜே எஸ் கே ஆகியோருடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைக்க, K A பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் மட்டுமன்றி படம்பிடிக்கப்படும் வித்திசயாசமான லொகேஷன்களாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

“அக்னி சிறகுகள்” திரில்லர் அனுபவத்தை உலகத்தரத்தில் தரும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சபட்ச ஆச்சர்யமாக கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் எனும் பெருமையை “அக்னி சிறகுகள்” பெற்றுள்ளது.

கண்களுக்கு விருந்தளிக்கும் பிரமாண்ட விஷுவல்களும், அசரவைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை வியப்பிலாழ்த்தும் பெரு விருந்து காத்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்கும் அருண் விஜய்யின் கேரக்டர் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதில் ரஞ்சித் எனும் பாத்திரத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளனர். இந்த போஸ்டரில் ரத்த காயத்துடன் வெறித்தனமான பார்வையில் அருண் விஜய் தோற்றமளிக்கிறார்.

அனேகமாக இந்த படத்தில் அவர் வில்லன் ரோலில் நடிக்கிறார் என்பது இந்த போஸ்டரின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here