இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் சிதைந்து செல்கின்றது.
வாரத்தில் எதோ ஒரு பொருளின் விலை அதிகரிக்கின்றது.
இதனால் மக்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்ததனால் கடுமையான செலவுகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
பால்மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
1kg பால்மா 150 ரூபாவினாலும், புதிய விலை 1345 ரூபா ஆகவும் உள்ளது.
400g பால்மா 60 ரூபாவினாலும்,புதிய விலை 540 ரூபவாக உயர்ந்துள்ளது.
ஆனால் மக்களின் வருமானம் உயரவில்லை என்பது மிகவும் கடினமானது.
இனிவரும் காலங்களில் விலை வாசி அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.