ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. ரோகித் சர்மா காய்ன் சுண்ட் சர்பிராஸ் அகமது டெய்ல் என அழைத்தார்.
சர்பிராஸ் அழைத்தபடி டெய்ல் விழ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர்.