ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார்.
பின்னர் பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கான ஒலிப்பதிவுக் கூடம் அமைத்து அங்கு பல ஆண்டுகளாக இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோஸ் நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு
அவரது ஒலிப்பதிவுக் கூடத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லிவிட்டது.
இந்தப் பிரச்னையில் பாரதிராஜா உள்ளிட்டோர் இளையராஜாவுக்கு ஆதரவாக நின்றனர்.
இதுதொடர்பான வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழரசன் படத்துக்கான இசைக்கோர்ப்பு பணிகளை முதன் முதலாக தனது வீட்டிலேயே மேற்கொண்டு வருகிறார் இளையராஜா.
இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் ஒரு படத்துக்கான பின்னணி இசையை வீட்டில் வைத்து இசையமைப்பது இதுவே முதல்முறை.