யேமனின் தெற்கு மாகாணத்தில் இராணுவ அணிவகுப்பின் போது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
அல்-தலேயா மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமில் பயிற்சி முடிந்து வெளியேறும் இராணுவ வீரர்களின் அணிவகுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை)
நடைபெற்ற நிலையிலேயே குறித்த அணிவகுப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை ஹவுத்தி போராளிகள் மேற்கொண்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.