ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி
க்கும் இடையே நடைபெற்ற முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
வார்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 335 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 302 ரன்களில் ‘ஆல் அவுட்’ ஆனது.

387 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3-வது ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் என்ற மோசாமான நிலையில் இருந்தது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 239 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அந்த அணியின் நாதன் லயன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்க் டேவிட் வார்னருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here