ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் போது அதில் அவரது நெருங்கிய தோழியான சசிகலாவின் கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை பிரியாமணி திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தலைவி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
சசிகலா கதாபாத்திரத்துக்கு பிரியாமணி பொருத்தமாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.