பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்கில் ரித்விகாவை தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றுள்ளதால் ரித்விகா மட்டும் அடுத்த வார நாமினேஷன் பட்டியலில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரித்விகாவின் இந்த நிலைக்கு காரணம் மும்தாஜின் பிடிவாதமே. தனது முடியின் கலரை எல்க்ட்ரிக் பச்சையாக மாற்ற அவர் சம்மதம் தெரிவிக்காததால்தான் ரித்விகா நாமினேஷன் ஆகியுள்ளார்.

இதனால் மும்தாஜ் மீது சக போட்டியாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே அடுத்த வாரம் நாமினேஷன் படலத்தின்போது மும்தாஜை அனைவரும் நாமினேட் செய்ய முடிவு செய்துள்ளனர். எனவே அடுத்த வார நாமினேஷன் பட்டியலில் ரித்விகா மற்றும் மும்தாஜ் மட்டுமே இருக்க வாய்ப்பு அதிகம்

கிட்டத்தட்ட இது செமி ஃபைனல் போன்றது என்றும், மும்தாஜா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்றும் ரித்விகா நம்பிக்கையுடன் கூறுகின்றார். மக்களுக்கும் மும்தாஜைவிட ரித்விகா மீது மதிப்பு அதிகம் என்பதால் அடுத்த வாரம் மும்தாஜ் வெளியேற வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here