அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால், நாட்டில் இரத்த ஆறு ஓடுவதையும், தீயில் எரிவதையும் யாராளும் தடுக்க முடியாமல் போகும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எச்சரித்துள்ளார்.

“அமெரிக்க மிலேனியம் சவால் நிறுவனத்துடன் இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால், இலங்கை உலக அதிகாரப் போட்டியின் மையமாக மாற்றப்பட்டு, இந்நாட்டில் இரத்த ஆறு ஓடுவதையும், தீயில் எரிவதையும் யாராளும் தடுக்க முடியாமல் போகும்.

இலங்கையிலுள்ள காணி உரிமையை அமெரிக்காவுக்கு கொள்ளையடிப்பதற்கு வழியமைக்கும் இந்த ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதனை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இந்த ஒப்பந்தத்தினால் 480 மில்லியன் டொலர் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கின்றது தானே. இதனைச் செய்வதில் என்ன தவறு இருக்கின்றது என பிரதமர் வினவி வருகின்றார்.

தனது தாய்க்கு விலைபேசினால், அவளை விற்பனை செய்ய யாராவது தயாராகுவார்களா? என நாம் அவர்களிடம் வினவுகின்றோம்.

எமது இலங்கைத் தாய்க்கு விலை பேச நாம் தயாரில்லை என பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here