உ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம், குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி,

படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்து, கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிலோய் கிராமம் அருகே சென்றபோது,

எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்தன.

தீ பிடித்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.

தீ அணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பயங்கர தீ விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 21 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெகுநேரமாகியும் 20 பேரை மீட்க முடியாததால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here