கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளது. ஒன்ராரியோ உள்ளிட்ட மாகாணங்களில் வாக்களிப்பு முடிவடைந்துள்ளது. அட்லான்டிக் கனடாவில் முன்னதாக வாக்களிப்பு முடிவுக்கு வந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளிவந்துள்ள 32 தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகளில் பிரதமர் ட்ரூடோவின் லிபரல் கட்சி 25 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. கொன்சர்வேட்டிவ் கட்சி 5 ஆசனங்களையும், புதிய ஜனநாயக கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.