இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.!

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை மையப்படுத்திய நிதி மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இவ்வாறான மோசடிகள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலகுகடன் வழங்கப்படுவதாகத் தெரிவித்து பல்வேறு இணைய வழி மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், குறித்த கடனை வழங்குவதாகக் கூறி மக்களைச் சமுக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணைய வழியில் அணுகுகின்றவர்களிடம் , மக்கள் தங்களின் தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வங்கிக் கணக்கு விபரங்கள் கடனட்டை மற்றும் முற்கொடுப்பனவு அட்டைகளின் தொடரிலக்கம் மற்றும் இரகசிய இலக்கம் என்பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here