சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அலையன்ஸ் விமான சேவைகள் நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவுள்ளன.

இதன்படி சென்னையில் இருந்து முற்பகல் 10.35க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்துக்கு பகல் 12 மணிக்கு தரையிறங்கும்.

பின்னர் அங்கிருந்து 12 .45 மணிக்கு புறப்பட்டு, சென்னையை பிற்பகல் 12.10க்கு சென்றடையும்.

முன்னதாக நவம்பர் முதலாம் திகதி சேவைகள் ஆரம்பமாகவிருந்தபோதும் சில நடைமுறைகளால் தாமதம் ஏற்படுத்தப்பட்டது.

இதேவேளை சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவைகளுக்கான கட்டணம் 12 ஆயிரத்து 990 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here