யுவான் வான் 5 Lotus Tower உடன் இணைத்த சீனா
யுவான் வான் 5 Lotus Tower உடன் இணைத்த சீனா

இந்தியாவை அச்சுறுத்தும் சீனாவின் நவீன வேவுக்கப்பல் பெரும் சர்சைகளை உலகளவில் ஏற்படுத்திய உள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோடை துறைமுகத்தில் 7 நாட்கள் தமது தேவைகளுக்காக தரித்து நிற்கவுள்ளது.

யுவான் வாங் – 5 என்கின்ற அதிக தொழில்நுட்பம் கொண்ட வேவுக்கப்பலின் செயற்பாடுகளை கண்டறிவதற்கு இந்தியா தனது டோனியர்- 228 வேவு விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பு என்ற வகையில் வழங்கியது.

இதன் வினைத்திறன் இலங்கை அரசைவிட சீனாவுக்கு நன்றாக தெரியும்.

Yuan Wang 5

யுவான் வாங் – 5 கப்பல் ஏன் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த வில்லை ? என்கிற கேள்வி எழுகின்றது.

சீனாவுக்கு கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அரசு அனுமதிக்கவில்லை.

ஹம்பாந்தோடை துறைமுகம் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது இதனால் சீனாவை யாராலும் தடுக்கமுடியாது. இதற்கு இலங்கை அரசும் உடந்தை.

யுவான் வாங் – 5 கப்பல் இலங்கையில் இருந்து கொண்டு துல்லியமாக எல்லா விடயத்தையும் கவனிக்க முடியம் அந்தளவுக்கு அதி சக்திவாய்ந்த தெழில்நுட்பம் உள்ளது.

இலங்கையில் எந்த ஒரு இடத்திலும் இருந்து கொண்டு தமது துல்லியமான கண்காணிப்புகளை செய்ய முடியும்.

இதில் இன்னும் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ளவேண்டும் தாமரை கோபுரம் நேற்று திறந்து வைக்கப்பட்டது

இதன் தொழில்நுட்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவும் இந்தியாவுக்கு தலைவலிதான் இதன் தொழில்நுட்பம் கண்காணிப்பு கோபுரமாகவே சீனாவுக்கு உதவுகின்றது.

யுவான் வான்- 5 கப்பல் வருகையும் தாமரை கோபுரம் நேற்று திறந்து வைக்கப்பட்டதும் வேவு தகவலை பரிமாற்று திறன் மிக்க ஒரு ஒத்திகையை செய்து தமது வெற்றி இலக்கை சீனா அடைந்துள்ளது.

இனி வரும் காலம் மிகவும் பிரச்சனைகளும் சர்சைகளையும் இலங்கைக்கு வரும் இதனால் ஆண்டு முடிவில் புதிய அதிபர் கூட தேர்வாகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here