பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்கு தளபதி 64 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 1-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது சமூகவலைதள பக்கத்தில், ‘தளபதி 64’ படத்தின் மோஷன் போஸ்டர் அல்லது ஃபர்ஸ்ட் லுக் தேதி அல்லது படம் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் உடனடியாக எங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here