அமெரிக்காவின் ஒக்லஹோமா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களைச் சேர்ந்த ஐந்து பேரும் லூசியானாவில் இருவரும் சூறாவளிக் காற்றுக்கு பலியாயினர்.
சூறாவளி காற்றால் டெக்ஸாஸ் முதல் ஜார்ஜியா வரை பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதே பகுதிகளில் ஏப்ரல் மாத துவக்கத்தில் வீசிய சூறாவளியால் 26 பேர் உயிரிழந்தனர்.
இதனால் இந்த ஆண்டில் அமெரிக்காவில் சூறாவளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சூறாவளிக் காற்றால் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.