வெளிநாடுகளுக்கு வேலைதேடி செல்லும் இந்தியர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் போன்ற காரணங்களால் இந்திய இளைஞர்கள் பலர் வளைகுடா நாடுகளான துபாய், கத்தார், அரபு அமீரகம் என பல நாடுகளுக்கும் வேலைக்கு செல்கின்றனர். அங்கு கட்டுமான பணி முதலிய வேலைகளில் ஈடுபடும் பலர் பல்வேறு விபத்துக்கள் மற்றும் உடல்நல குறைவால் இறந்தும் போகின்றனர்.

இவ்வாறு குவைத், அரேபியா, சவூதி, கத்தார், ஓமன், பஹ்ரைன் மற்றும் அரபு அமீரகம் ஆகிய ஆறு நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 6014 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறிய அவர் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 34 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்று இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here