உலகின் பல நாடுகள் ஆனந்தமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஆயத்தமாகியபோது
கடந்த 24-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை ‘ உர்சுலா’ என்ற அசுரப்புயல் மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது.
மின் கம்பங்களையும் மரங்களையும் சாய்த்தபடி புயல்காற்று சுழன்று அடித்தது. வீடுகளின் கூரைகள் பறந்தன.
புயல் காற்றுடன் கடும் மழையும் பெய்ததில் கடலோரப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் நாட்டின் பல பகுதிகளும் வெள்ளக் காடானது. பல லட்சம் பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
வெள்ளம் வடிந்து அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் உர்சுலா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை
41 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.