யாழ். தேவி ரயில் தடம் புரண்டமையால் வட பகுதிக்கான ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சேதமடைந்துள்ள ரயில் கடவைகளை கூடிய விரைவில் சரி செய்யும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த யாழ். தேவி கடுகதி ரயில், கல்கமுவ மற்றும் அமன்பொல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று பகல் தடம்புரண்டது.

குறிப்பாக 5 ரயில் தண்டவாளங்கள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அதனால் ரயில் கடவைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தடம் புரள்வினால் 250 மீட்டர் தூர ரயில் கடவைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கல்கமுவ மற்றும் அமன்பொல பகுதிகளுக்கு விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.