கலவரத்தில் 210-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயம் அடைந்தவர்களில் 30 சதவீதம் பேர் குண்டு காயம் அடைந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

சிலர் சிகிச்சை பலனின்றி நேற்றும், இன்று காலையிலும் உயிரிழந்தனர். டெல்லி கலவர பலி உயர்ந்தபடி உள்ளது.

நேற்று மதியம் வரை கலவரத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக இருந்தது.இன்று (வியாழக்கிழமை) காலை பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது.

இந்தநிலையில் மருத்துவமனைகளில் இருந்தவர்களில் மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது காலை 9 மணிக்கு தெரியவந்துள்ளது.

இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. 6 தடவை உளவு அமைப்புகள் எச்சரிக்கை தகவலை கொடுத்தனர்.

அப்போதே டெல்லி போலீசார் உஷாராகி நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரத்தை தடுத்து இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here