கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!

தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.

வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் ஜுக் பாக்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் புது சூரியன், சில் ப்ரோ, ஜிகிடி கில்லாடி, பிரியாத என்ன, தாயின் அன்பு, முரட்டு தமிழன் டா என மொத்தம் ஆறு பாடல்கள் வெளியாகி பட்டாயா கிளப்பி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here