இலங்கையில் பெண்பிள்ளைகள் காணாமல் போகும் சம்பவம் அதிகரித்துள்ளது.

நேற்று கொழும்பு 12 சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக வாழைத்தோட்டம்

காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளும், உறவுக்கார பெண்பிள்ளையும்

நேற்று வீட்டில்இருந்து காலை 8 மணிக்கு மூச்சக்கரவண்டில் புறப்படுவார்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என இவர்களின் தந்தைகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

வயது 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் இவர்கள் பயன்படுத்திய தொலை பேசி இளங்கங்களை பரிசோதித்தபோது இவர்கள்

விகாரமஹாதேவி பூங்காவிலும், காலிமுகத்திடல் ஆகிய இடங்களுக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

இதே போல் அண்மையில் யாழ் தெல்லிப்பளை பகுதியிலும் இளம் பெண் கடத்தப்படுள்ளதும்,

கொழும்பில் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் உடல் கண்டுபிடிக்கப்பட நிகழ்வும்,

இலங்கையில் 1500 பெண்களை காணவில்லை என அண்மையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்திருந்தது.

1500 பேரும் தொழில்நிமித்தமாக வேறு பெயர்களில் வெளிநாடு சென்றுஇருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here