வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள், அப்படி செய்தால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சி தனது டிவிட்டில் திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. திருவள்ளுவர் இத்தனை வருடங்கள் வெள்ளை உடையில் மட்டும்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், திருவள்ளுவரையும், திருக்குறளையும் பாஜக அவமானப்படுத்திவிட்டது.
உலக பொதுமறை தந்த திருவள்ளுவரை காவியடித்து தன்னுடைய கட்சிக்குள் சேர்க்க நினைப்பது மிக மோசமானது.
தமிழர்கள் ஒரு பண்பட்ட நாகரீகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை அவமானப்படுத்த கூடாது.
வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். அவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை இப்படி கலங்கப்படுத்த கூடாது.
இதற்கு உடனடியாக தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.