தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் வரும் 7-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என்பதை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here