ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. அதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது .
தர்பார் இசை வெளியீட்டு நிகழ்வுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த அரங்கில் 8000 இருக்கைகள் உள்ளன.
இசை வெளியீட்டு விழாவைக் காண தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளனர்.
திருவிழா போல் நடைபெறும் இசைவெளியீட்டு நிகழ்வில் பிரபலங்களுக்கென தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.