ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் 38 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியிலிருந்து வெறும் 50 கி.மீ-க்கு உள்ளாகவே அந்நாட்டின் ஒரேயொரு அணுமின் நிலையம் அமைந்துள்ளது.
நல்வாய்ப்பாக மிதமான நிலநடுக்கத்தால் அணுமின் நிலையத்துக்கு எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை.
மிகவும் கடுமையான பாதிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக ஈரான் தப்பியுள்ளது.
கலாமே நகர்ப்பகுதியில் பாதிப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.