உக்கிரேனுக்கு 70 போர் விமானங்களை வழங்கும் ஐரோப்பா
உக்கிரேனுக்கு 70 போர் விமானங்களை வழங்கும் ஐரோப்பா

பல்கேரிய, சுலோவாக்கிய, போலந்து ஆகிய நாடுகள் உக்கிரேனுக்கு 70 போர் விமானங்களை வழங்கவுள்ளது என உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்கிரேனுக்கு பலநாடுகள் நிதி மற்றும் போர்தளபாடங்களை வழங்கிவருகின்றது. நேற்று பொலரசில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது ஆனலும் யுத்தத்தை ரஷ்யா நிறுத்தவில்லை ஒருபுறம் பேச்சு மறுபுறம் யுத்தம் என புடின் முடிவுசெய்துள்ளார்.

உக்கிரேன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற 6 நாளாக கடும்போர் நடைபெற்று வருகின்றது. அதேபோன்று தெற்க்கு உக்கிரனுக்குள் ரஷ்யா இராணுவம் நுழைந்துள்ளது

இருதரப்புக்கும் கடும் சண்டைகள் நடைபெற்றுவருகின்றது முப்படை தாக்குதலையும் ரஷ்யா நடத்துகின்றது ரஷ்யா இராணுவத்தில் 6000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

செய்மதி புகைப்படங்கள்

ரஷ்யா அதிபர் புடின் தனது அணுவாயுதப்படைகளை உக்கிரேனின் எல்லைக்குநகர்த்தியுள்ளார் இதன் செய்மதி புகைப்படங்கள் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை உலகநாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

எப்படியாது உக்கிரேன் தலைநகர் கீவ்வை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் ரஷ்யா இராணுவம் கீவ்வுக்கு வடக்கே 64 km அணிவகுத்து நிக்கின்ற செய்மதி புகைப்படம் வெளிவந்துள்ளது. பெரும் போருக்கு இராணுவத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here