பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஸ் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டெனும் பாக்கிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

பிரிட்டிஸ் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டை சிறுவர்வளர்ச்சியின் ஒரு பகுதியாக ஊக்குவிக்கும் முயற்சி திட்டத்தின் அடிப்படையிலேயே சிறுவர்கள் பிரிட்டனின் இளவரசருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
இதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய கேட் மிடில்டன் இரு பந்துகளை அடித்து ஆட முயன்று பிடிகொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

இருவரும் துடுப்பெடுத்தாடிய பின்னர் பாக்கிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அகடமியை சேர்ந்தவர்கள் அவர்களிற்கு பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளனர்.

இளவரசரின் பிள்ளைகளிற்கு பட் ஒன்றையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.

நியுசிலாந்திற்கான விஜயத்தின்போதும் இந்தியாவிற்கான விஜயத்தின்போதும் அவர் கிரிக்கெட் விளையாடியிருந்தார்.

இளவரசர் வில்லியமும் மனைவியும் பாக்கிஸ்தானின் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சிலரையும் சந்தித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here