சீன பிரபல நடிகை பேன் பிங்பிங் 4 மாதமாக காணததால் வரி ஏய்ப்பு புகாரில் கைதாகிருக்கலாம் என்று கருதப்படுகிறது.தொடர்புடைய படம்

சீனாவின் பிரபல நடிகை பேன் பிங்பிங். ஆலிவுட் நடிகை போன்று தோற்றம் கொண்டவர். இவர் சீன மொழி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

கடந்த 2015-ம் ஆண்டில் ‘சீனாவின் பிரபல நடிகை’ என இவரை டைம்ஸ் நாளிதழ் அறிவித்தது. இவரை கடந்த 4 மாதமாக காணவில்லை.

ஜூன்மாதம் தொடக்கத்தில் இருந்து இவரை காணவில்லை. திபெத்தில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றார். இவர் குறித்து சீன பத்திரிகை ஒன்று சமீபத்தில் கட்டுரை வெளியிட்டது. அதில் இவர் மாயமானது குறித்த தகவல் வெளியானது. அதை தொடர்ந்து அவர் பற்றிய செய்திகள் பரபரப்பு அடைந்தன.

நடிகை பேன், வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி இருந்தார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அவர் எங்கு இருக்கிறார். அவரது கதி என்ன என்று தெரியவில்லை. கடந்த 2011-ம் ஆண்டில் சீனாவில் நடிகர் அஸ் வெய்வெய் என்பவர் வரி ஏய்ப்பு புகாரில் கைது செய்யப்பட்டு 3 மாதத்துக்கு பின் வெளியே வந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here