பருத்தித்துறையில் குழு மோதலில் 5 பேர் காயம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இரு கிராம மங்களிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடி பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கிடையில் நேற்று மாலை இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலே, இரு கிராமங்களுக்கு இடையிலான ஏற்பட்ட மோதலாக மாறியுள்ளது.

இதனால் பலர் காயமடைந்ததுடன், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் சமாளிக்க முடியாமல் போகவே இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் நேற்று மாலை பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது அங்கு பெருமளவான பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here